Saturday, April 6, 2013

பாமாலை பாடிடுவோம் | Tamil christian songs


Subscribe to me on YouTube
 நல்லகாலம் பொறந்திருச்சு, நாடும் வீடும் செழிச்சிருச்சு
புனிதர் கோயில் தொரந்திருச்சு, நமக்கு புதுவாழ்வு மலர்ந்திருச்சு

பாமாலை பாடிடுவோம் சவேரியாரே
உங்க பாதம் தொட்டு வணங்கிடுவோம் சவேரியாரே ...(2)

கொண்டாடி மகிழ்ந்திடுவோம் சவேரியாரே
உமக்கு கோயில் கட்டி கும்பிடுவோம் சவேரியாரே ...(2)

பாமாலை பாடிடுவோம் சவேரியாரே
உங்க பாதம் தொட்டு வணங்கிடுவோம் சவேரியாரே ...(2)

இயேசு சாமி வார்த்தைகளை பேசி வந்த போதகரே

இறையரசின் தூதுவரே சவேரியாரே ...(2)

இஞ்யாசியார் கண்டெடுத்த இயேசுசபை மாமுனியே ...(2)
இறைவன் தந்த அருட்கொடையே சவேரியாரே ...(2)

வாழியவே! வாழியவே! சவேரியாரே
எங்கள் விசுவாச நாயகரே சவேரியாரே ...(2)

பாமாலை பாடிடுவோம் சவேரியாரே
உங்க பாதம் தொட்டு வணங்கிடுவோம் சவேரியாரே
கொண்டாடி மகிழ்ந்திடுவோம் சவேரியாரே
உமக்கு கோயில் கட்டி கும்பிடுவோம் சவேரியாரே

தென்னாட்டு பகுதியிலே கடலோர ஊர்களிலே

நற்செய்தி போதித்த சவேரியாரே ...(2)

நம்பி வந்த எங்களது முன்னோர்கள் யாவருக்கும் ...(2)
ஞ்யானஸ்நானம் வழங்கிய சவேரியாரே ...(2)

வாழியவே! வாழியவே! சவேரியாரே
எங்கள் விசுவாச நாயகரே சவேரியாரே ...(2)

பாமாலை பாடிடுவோம் சவேரியாரே
உங்க பாதம் தொட்டு வணங்கிடுவோம் சவேரியாரே


கட்டுமர ஓடத்தில கடல்மீது போகயில

கிட்டிருந்து காத்திடுமே சவேரியாரே ...(2)

அலையோடு போராடி வலைவீசும் வேளையிலே ...(2)
நல்லாசி தந்திடுமே சவேரியாரே ...(2)

வாழியவே! வாழியவே! சவேரியாரே
எங்கள் விசுவாச நாயகரே சவேரியாரே ...(2)

பாமாலை பாடிடுவோம் சவேரியாரே
உங்க பாதம் தொட்டு வணங்கிடுவோம் சவேரியாரே ...(2)

கொண்டாடி மகிழ்ந்திடுவோம் சவேரியாரே
உமக்கு கோயில் கட்டி கும்பிடுவோம் சவேரியாரே ...(2)

பாமாலை பாடிடுவோம் சவேரியாரே
உங்க பாதம் தொட்டு வணங்கிடுவோம் சவேரியாரே

0 comments:

Post a Comment

 

Copyright © Tamil Christian Songs Design by O Pregador | Blogger Theme by Blogger Template de luxo | Powered by Blogger