ஆன்மாவே எனக்காதாயம் என வாழ்ந்தால் கவலையில்லை ...(2)
அழியும் செல்வம் சேர்ப்பதா! அழியா ஆன்மாவை காப்பதா! ...(2)
இந்த கேள்விக்கு பதிலாய் வாழ்ந்தவர் யார்!
அவரே புனித சவேரியார்!
உலகமெல்லாம் எனக்காதயம் என வாழ்ந்தவர் மகிழ்ந்ததில்லை
ஆன்மாவே எனக்காதாயம் என வாழ்ந்தால் கவலையில்லை
பொன்னும் பொருளும் தேடுகிறோம்! பட்டம் பதவியை நாடுகிறோம்! ...(2)
எதுவும் நிறைவு தருவதில்லை! எதிலும் மகிழ்ச்சி நிலைப்பதில்லை!
|முடிவில்லாதது ஒன்றே தான்! அழிவில்லாத ஆன்மா தான்!| ...(2)
உலகமெல்லாம் எனக்காதயம் என வாழ்ந்தவர் மகிழ்ந்ததில்லை
ஆன்மாவே எனக்காதாயம் என வாழ்ந்தால் கவலையில்லை
அறிவும் திறனும் அமைவதில்லை! உறவும் நட்பும் தொடர்வதில்லை! ...(2)
தேடும் எதுவும் கிடைப்பதில்லை! கிடைக்கும் பலவும் நிலைப்பதில்லை!
|முடிவில்லாதது ஒன்றே தான்! அழிவில்லாத ஆன்மா தான்!| ...(2)
உலகமெல்லாம் எனக்காதயம் என வாழ்ந்தவர் மகிழ்ந்ததில்லை
ஆன்மாவே எனக்காதாயம் என வாழ்ந்தால் கவலையில்லை
அழியும் செல்வம் சேர்ப்பதா! அழியா ஆன்மாவை காப்பதா! ...(2)
இந்த கேள்விக்கு பதிலாய் வாழ்ந்தவர் யார்!
அவரே புனித சவேரியார்!
உலகமெல்லாம் எனக்காதயம் என வாழ்ந்தவர் மகிழ்ந்ததில்லை
ஆன்மாவே எனக்காதாயம் என வாழ்ந்தால் கவலையில்லை
0 comments:
Post a Comment