Thursday, April 4, 2013

andavare en andavare ஆண்டவரே என் ஆண்டவரே

ஆண்டவரே என் ஆண்டவரே நீர் என்னைக் கைவிடமாட்டீர்
துன்ப துயரங்கள் எனைத் தொடர்ந்தாலும்
துணைகள் இன்றியே நான் துவண்டாலும்
நீர் என்னைக் கைவிடமாட்டீர்
ஆண்டவரே என் ஆண்டவரே நீர் என்னைக் கைவிடமாட்டீர் -- 2

இன்னலுற்ற வேளையிலும் இதயம் உடைந்த பொழுதினில்
கைவிடமாட்டீர் கைவிடமாட்டீர்
இடையன் இல்லா ஆட்டைப்போல் இலக்கின்றி அலைந்தாலும்
இரக்கம் மறந்தும்மை நான் உதறிச் சென்றாலும்
இறவா இறைவன் உன் இதயநிழலில் வாழுவேன்
இதயமாய் உன் கரத்தை இறுகப் பற்றிக் கொள்ளுவேன் -- 2

ஆண்டவரே ஆண்டவரே ஆண்டவரே என் ஆண்டவரே
தோல்வி தொடர்ந்த வேளையில் சோர்ந்து நொந்த பொழுதினில்
உலகம் பழிக்கும் நேரத்தில் உறவும் இகழும் காலத்தில்
உயிரைத் தந்த உம்மை நான் மறந்து போனாலும்
குறையா உன் ஆற்றல் கண்டு வியந்து பாடுவேன்
நிறைவாய் உன் அன்பில் நிலைத்து என்றும் மகிழுவேன் -- 2

0 comments:

Post a Comment

 

Copyright © Tamil Christian Songs Design by O Pregador | Blogger Theme by Blogger Template de luxo | Powered by Blogger